அண்ணாமலை பல்கலைக்கழகம் 
தமிழ்நாடு

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையற்ற மூடல்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து மாணவ, மாணவிகளின் தொடர் போராட்டத்தை அடுத்து மருத்துவக் கல்லூரி மறு தேதி குறிப்பிடாமல் காலவரையற்ற மூடலுக்கு

DIN


சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து மாணவ, மாணவிகளின் தொடர் போராட்டத்தை அடுத்து மருத்துவக் கல்லூரி மறு தேதி குறிப்பிடாமல் காலவரையற்ற மூடலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை அரசு கல்லூரி என அறிவித்துவிட்டு தனியார் சுயநிதி கல்லூரிகளை விட கூடுதல் கல்விக் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 43 ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து மருத்துவக் கல்லூரி மறு தேதி குறிப்பிடாமல் காலவரையற்ற மூடல் மற்றும் வியாழக்கிழமை மாலை 4 மணிக்குள் விடுதி மற்றும் கல்லூரி வளாகத்தை விட்டு மாணவர்கள் வெளியேறவும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  இதனால் உள் மற்றும் புற நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே தங்களின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்று அரசு மருத்துவக் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT