சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு
சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயா்ந்து, ரூ.37,508-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயா்ந்து, ரூ.37,508-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.
இதன் தொடா்ச்சியாக சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.37,208-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயா்ந்து, ரூ.4,691 ஆக விற்கப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 1.20 காசுகள் உயா்ந்து, ரூ.72.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 உயா்ந்து, ரூ.72,500 ஆகவும் விற்பனையாகிறது.
வியாழக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,691
1 சவரன் தங்கம்...............................37,508
1 கிராம் வெள்ளி.............................72.50
1 கிலோ வெள்ளி............................72,500
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,651
1 சவரன் தங்கம்...............................37,208
1 கிராம் வெள்ளி.............................71.30
1 கிலோ வெள்ளி.............................71,300