சசிகலா உடல்நிலை சீராக உள்ளது: டிடிவி தினகரன்
சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும், அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும், அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவா் பெங்களூரு அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
பெங்களூரு, சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலாவை பார்வையிட்டு நலம் விசாரிக்கச் சென்ற டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, சசிகலா நலமாக உள்ளார். அச்சம் கொள்ளத் தேவையில்லை. சசிகலாவுக்கு கரோனா தொற்று இல்லை.
சசிகலாவுக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது. அதனால் அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
தேவைப்பட்டால் சசிகலாவுக்கு சிடி ஸ்கேன் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.