பொன்முடி 
தமிழ்நாடு

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜர்

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அவரது மகன் பொன்.கௌதமசிகாமணி எம்பி ஆகியோர் விழுப்புரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினர்.

DIN

விழுப்புரம்: செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அவரது மகன் பொன்.கௌதமசிகாமணி எம்பி ஆகியோர் விழுப்புரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினர்.

கடந்த திமுக ஆட்சியின் போது, விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பூத்துறை கிராமத்தில், குவாரி ஒப்பந்தம் போடப்பட்டு, அளவுக்கதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அவரது மகன் பொன்.கௌதமசிகாமணி, உறவினர்கள் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012}ஆம் ஆண்டு, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். 

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில், நீதிபதி இளவழகன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 

க.பொன்முடி எம்எல்ஏ, பொன்.கௌதமசிகாமணி எம்பி, ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத், ராஜமகேந்திரன் ஆகிய 6 பேர் ஆஜராகினர். கோதகுமார் ஆஜராகாததால் அவரது தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்கில் தொடர்புடைய க.பொன்முடி, பொன்.கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகியோருக்கு 20 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை ஜன.25}ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கு: இதே போல, திமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸôர் கடந்த 2006}ஆம் ஆண்டு க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. க.பொன்முடி ஆஜரானார். விசாலாட்சி ஆஜராகவில்லை. அவரது தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணையை ஜன.25}ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்புட்குழி மணிகண்டீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்

குறைந்து வரும் நாடாளுமன்ற விவாதங்கள்: ஓம் பிா்லா கவலை

4 மாதத்தில் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சை மூலம் மீட்பு: அரசு மருத்துவா்கள் சாதனை

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.145 கோடி கடன்: சென்ட்ரல் வங்கி

SCROLL FOR NEXT