தமிழ்நாடு

உ.புதுக்கோட்டை கண்மாயில் உள்ள மதகு, கடைமடைப் பகுதி ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் புகார்

DIN

உசிலம்பட்டி அருகே உ.புதுக்கோட்டை கண்மாயில் உள்ள மதகு, கடைமடைப் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். 

வைகை ஆண்டிபட்டி அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் மதகுவிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு , உத்தப்பநாயக்கனூரில் உள்ள தொட்டிப்பாலம் வழியாக வழியாக உசிலம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த 58 கிராம கால்வாய் திட்டத்தின் மூலம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 33 கண்மாய்கள் நிரம்பி பாசன வசதி பெறும். 

இந்நிலையில் 33 கண்மாய்களில் ஒன்றான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பஞ்சாயத்திற்குட்பட்ட உ.புதுக்கோட்டைக் கிராமத்தில் உள்ள கண்மாயும் ஒன்று. 58 வைகை இந்த கண்மாய் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த கண்மாய் தொடர் மழை பெய்தும் கண்மாயில் சிறிதளவு தான் தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது உசிலம்பட்டி கண்மாய்க்கு கிராம கால்வாய்க்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் உ.புதுக்கோட்டை கண்மாய்க்கும் தண்ணீர் கொண்டுவர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் உ.புதுக்கோட்டையிலிருந்து உச்சிகன்னம்பட்டி பகுதிக்குச் செல்லும் மதகு, கடைமடைப் பகுதி சேதமடைந்தும், கால்வாய் பகுதிகள் முழுவதும் ஆக்கிரமிப்பு பிடியில் காணப்படுவதால் தண்ணீர் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பகுதியிலிருந்த ஷட்டர் அழிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள ஓடைகள் இருந்ததிற்கான அடையாளம் தெரியாத அளவிற்கு முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் உ.புதுக்கோட்டை கண்மாய் நிரம்பும் பட்சத்தில் அதனைச் சுற்றியுள்ள மொண்டிக்குண்டு, குளத்துப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, உச்சிகன்னம்பட்டி கடைமடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பாசன வசதி பெறும். இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பாசன வசதி பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உ.புதுக்கோட்டை கண்மாயில் மதகு மற்றும் கால்வாய் பகுதிகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

SCROLL FOR NEXT