முகப்பு
தமிழ்நாடு

ஜன. 30-ல் தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

ஜனவரி 30-ஆம் தேதி தேமுதிகவின் தேர்தல் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
ஜன. 30-ல் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் (கோப்புப்படம்)
பகிர்:


ஜனவரி 30-ஆம் தேதி தேமுதிகவின் தேர்தல் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவுள்ளது.

இதனிடையே தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வியூகங்களின் அடிப்படையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டணி குறித்துக் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அதன்படி கட்சி தலைமைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜனவரி 30-ஆம் தேதி தேமுதிகவின் தேர்தல் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் காலை 10.45 மணிக்கு ஆலோசனை நடைபெறும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →