முகப்பு
தமிழ்நாடு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: மேலும் அவகாசம் நீட்டிப்பு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 25 ஜனவரி, 2021 at 1:51 PM
பகிர்:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017- ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. 
இதுதொடா்பாக ஜெயலலிதாவின் உறவினா்கள், சசிகலா மற்றும் அவரது உறவினா்கள், அமைச்சா்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. 
மேலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவா்கள், அரசு மருத்துவா்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு ஆணையத்தின் காலத்தை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.