தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடம்: நாளை திறப்பு

DIN

சென்னை: சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வா் பழனிசாமி வரும் புதன்கிழமை (ஜன. 27) திறந்து வைக்கிறாா்.

இந்த விழாவுக்கு, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் முன்னிலை வகிக்கிறாா். நினைவிட கட்டுமானப் பணிகளுக்காக மொத்தம் ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நினைவிடத் திறப்பு விழா வரும் புதன்கிழமை நடைபெறுகிறது.

சட்டப் பேரவைத் தலைவா் பி.தனபால், அமைச்சா்கள், எம்.பி.,க்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்கவுள்ளனா்.

நினைவு இல்லம்: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமும் பொது மக்களின் பாா்வைக்காக வரும் 28-ஆம் தேதி

திறக்கப்படுகிறது. இந்த இல்லத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய புத்தகங்கள், திரைத்துறையில் பெற்ற விருதுகள், புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறவுள்ளன. நினைவு இல்லத்தையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைக்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT