தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் குடியரசு நாள் விழா

DIN

நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் 72ஆவது குடியரசு தின விழா விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை, ஆயுதப்படை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து காவல் துறையைச் சேர்ந்த 63 பேருக்கு தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை வழங்கினார்.

மேலும், சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, தோட்டக்கலை த் துறை, வேளாண்மை த் துறை வேளாண்மை பொறியியல் துறை, கல்வித்துறை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 34 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐ.எஸ்.மெர்சிரம்யா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சரண்யா அரி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் என்.சுரேஷ்ராஜன்(நாகர்கோவில்) மனோதங்கராஜ்(பத்மநாபபுரம்) மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT