தமிழ்நாடு

குடியரசு நாள்: ஈரோட்டில் ஆட்சியர் கதிரவன் தேசியக் கொடியேற்றினார்

DIN

நாட்டின் 72-வது குடியரசு நாளை முன்னிட்டு ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்திய நாட்டின் 72-வது குடியரசு நாள் விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர், தீயணைப்புதுறையினர், முன்னாள் படைவீரர் நலத்துறையினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 197 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சர்புதீன் , வட்டாட்சியர் பரிமளா உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT