கோப்புப்படம் 
தமிழ்நாடு

நாளை மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை (ஜன்.29) மாலை 4.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 

DIN


சென்னை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை (ஜன்.29) மாலை 4.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 

தமிழக சட்டப்பேரவை பிப்.2 ஆம் தேதி கூடும் நிலையில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில் வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதிக்க இருக்கக்கூடிய அம்சங்கள் குறித்தும், வரவிருக்கும் பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும்  தேர்தலுக்கு முன்பாகவே அரசின் இடைக்கால பெட்ஜெட்டை தாக்கல் செய்வது குறித்தும், வேளாண் சட்டங்கள், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் அளித்த அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் குறித்து கேள்வி எழுந்தால் அதனை எவ்வாறு சமாளிப்பது குறித்தும் விவாதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் முதல் நதிநீா் இணைப்புத் திட்டம் தொடங்கியது: 23,000 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்

தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT