வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனம் 
தமிழ்நாடு

தைப்பூசம்: வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள திருவருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN


கடலூர்: கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள திருவருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வடலூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் திருஅருள்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இந்தத் தெய்வ நிலையத்தில் மாதந்தோறும் பூசம் நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும். இதில், தை மாதத்தில் வரும் ஜோதி தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தாகும். 

அதன்படி, 150-ஆவது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவுக்கான கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, அதிகாலை அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. 

வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனம்

இதைத் தொடர்ந்து, வடலூரில் உள்ள சத்திய தரும சாலையில் வள்ளலாரின் அகவலை பாராயணம் செய்தவாறு சன்மார்க்க கொடியை வள்ளலார் அன்பர்கள் ஏற்றினர். அப்போது, "அருள்பெருஞ்ஜோதி அருள்பெருஞ்ஜோதி... தனிப் பெருங்கருணை அருள்பெருஞ்ஜோதி...' என்று பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பினர்.

தொடர்ந்து, மருதூரில் உள்ள வள்ளலார் சன்னதி, நற்கருங்குழியில் உள்ள வள்ளலார் சன்னதி, பார்வதிபுரத்தில் உள்ள ஞான சபை ஆகிய இடங்களில் அகவல் பாராயணம் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக, அந்தந்தக் கிராமத்தினர் கொடியை ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, தரும சாலையில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. 

திருவருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையம்​

ஜோதி தரிசனம்: வியாழக்கிழமை விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி ஆகிய நேரங்களிலும், நாளை வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி ஆகிய ஆறு காலங்களில் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. ஜன. 30 -ஆம் தேதி சித்திவளாக திருவறை தரிசன நிகழ்வு நடைபெறும். 

ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து வடலூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி!

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

SCROLL FOR NEXT