திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம் 
தமிழ்நாடு

அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்

 குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வு பெறும்போது ரூ.10 லட்சம் பணிக்கொடை வழங்க வலியுறுத்தி திருச்சியில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருச்சி: குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வு பெறும்போது ரூ.10 லட்சம் பணிக்கொடை வழங்க வலியுறுத்தி திருச்சியில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். தமிழ்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சித்ரா,பொருளாளர் ராணி சி.ஐ.டி.யு.மாவட்ட செயலாளர் ரங்கராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினர்.

அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்று குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சமும் உதவியாளர்களுக்கு ரூ 5 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

நிகழ்வில் நிர்வாகிகள் கலைச்செல்வி, சித்ரா, கலாராணி, மல்லிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT