தமிழ்நாடு

உலகளவில் கரோனா பாதிப்பு 10.20 கோடியாக உயர்வு 

DIN


உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 10.20 கோடியாக அதிகரித்துள்ளது

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 10,20,34,770 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 22,00,911 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 7,38,63,532 பேர் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,59,66,867 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,09,739 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,63,38,607 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,07,20,971 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,54,047 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 90,60,786 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,21,676 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT