சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் அரசு செவிலியர்கள் கருப்புபேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அரசு செவிலியர்களுக்கு மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஐந்து கட்ட காலமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
சென்னை, நெல்லை, தஞ்சை உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.