முகப்பு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.98 அடி 
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.98 அடி 
பகிர்:


மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது.

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டால் மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் வரை குடிநீர் தேவைக்காகவும் காவிரிக் கரையோரங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

அதிகபட்சமாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படும்.

வெள்ளிக்கிழமை மாலை பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் சனிக்கிழமை காலை 8 மணி முதல் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

புதன்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 105.96 அடியிலிருந்து 105.98 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1069 கன அடியிலிருந்து 1034 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 72.80 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →