திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள். 
தமிழ்நாடு

நெல்லையில் செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அரசு செவிலியர்களுக்கு மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஐந்து கட்ட காலமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும்.

நெல்லையில் செவிலியர்கள் போராட்டம்

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கீதா கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT