சித்தோடு அருகே கழிவுப் பஞ்சாலையில் தீ விபத்து
பவானி அருகேயுள்ள சித்தோட்டில் கழிவுப் பஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமாகின.
தமிழ்நாடுசித்தோடு அருகே கழிவுப் பஞ்சாலையில் தீ விபத்து
பவானி அருகேயுள்ள சித்தோட்டில் கழிவுப் பஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமாகின.
பவானி: பவானி அருகேயுள்ள சித்தோட்டில் கழிவுப் பஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமாகின.
சித்தோட்டை அடுத்த வசுவபட்டி, குப்பண்ண கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்குச் சொந்தமாக பனியன் துணிகளை இயந்திரம் மூலம் அரைத்து, மீண்டும் பஞ்சாக மாற்றும் ஆலை பச்சைப்பாலிமேடு அருகே உள்ளது.
தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்.
இந்த ஆலையில் சனிக்கிழமை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராமல் தீ பிடித்துள்ளது.
பஞ்சாலை என்பதால் தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதைக் கண்ட தொழிலாளர்கள் பவானி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் காந்தி தலைமையில் விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க முயன்றனர். பஞ்சில் பிடித்த தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
தீயணைப்புப் படை வீரர்கள்
சுமார் 2 மணி நேரம் போராடிய தீயணைப்புப் படையினர் பஞ்சாலையில் பிடித்த தீயை முற்றிலும் அணைத்தனர்.
மின்கசிவால் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இவ்விபத்தில், ரூ.5 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமாகின. இதுகுறித்து, சித்தோடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.