Gold prices rise by Rs 136 in Chennai 
தமிழ்நாடு

தங்கம் சவரனுக்கு ரூ.136 உயர்ந்து விற்பனை

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. 

இதன் தொடா்ச்சியாக சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.136 உயா்ந்து, ரூ.37,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.17 உயா்ந்து, ரூ.4,655 ஆக உள்ளது. 

வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் உயா்ந்து, ரூ.74.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து, ரூ.74.600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,655

1 சவரன் தங்கம்...............................37,240

1 கிராம் வெள்ளி.............................74.60

1 கிலோ வெள்ளி.............................74,600

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,638

1 சவரன் தங்கம்...............................37,104

1 கிராம் வெள்ளி.............................71.00

1 கிலோ வெள்ளி............................71,000.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT