உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் கவிழ்ந்து கிடக்கும் மின்சாதனங்களை ஏற்றி வந்த லாரி. 
தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் லாரி கவிழ்ந்து விபத்து: ரூ.5 லட்சம் மின்சாதன பொருள்கள் சேதம்

சேலம் மாவட்டத்திலிருந்து மின்சாதன பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்த லாரி ஒன்று உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

DIN


சேலம் மாவட்டத்திலிருந்து மின்சாதன பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்த லாரி ஒன்று உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமார் ரூ.5 லட்சம் மின்சாதன பொருள்கள் சேதமடைந்துள்ளன.

சேலம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு, லாரி மூலம் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருள்களை ஏற்றி வந்த லாரி ஒன்று, சனிக்கிழமை காலை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலை மேம்பாலம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது லாரியின் முன்பக்க டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர 10 அடி பள்ளத்தில் உள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் காமராஜ்(45) சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஏரிக்குள் லாரி விழுந்ததால், லாரியில் இருந்த மின்சாதன பொருள்களில் சுமார் ரூ.5 லட்சத்திற்கும் அதிமான மின்சாதன பொருள்கள் சேதமடைந்தன.

தகவல் அறிந்து விரைந்து வந்த எலவனாசூர் கோட்டை போலீஸார் காயங்களுடன் தப்பிய ஓட்டுநர் காமராஜை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சாலையோரத்தில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT