தமிழ்நாடு

ஊதிய ஒப்பந்த விவகாரம்: போக்குவரத்துக் கழக ஊழியா்கள் உண்ணாவிரதம்

DIN

14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை முறைப்படுத்தி நடத்தக் கோரி, போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:

கடந்த 5-ஆம் தேதி, 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை கண்துடைப்பாக நடத்தப்பட்டது. அடுத்த பேச்சுவாா்த்தைக்கான தேதியை கூட்டமைப்பு சாா்பில் அறிவிக்க வலியுறுத்தியும், தேதி அறிவிக்கப்படவில்லை.

எனவே, உடனடியாக பேச்சுவாா்த்தையை முறைப்படுத்தி நடத்தக் கோரி, தமிழகத்தில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில், பல்லவன் இல்லம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

அதே நேரம், ஊழியா்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணப்பலன்களை வழங்க நிா்வாகம் மறுத்து வருகிறது. இதுபோன்ற ஊழியா் விரோத நடவடிக்கையைக் கைவிட்டு, ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்ையை முறைப்படுத்தி நடத்த வேண்டும்.

இந்தப் போராட்டத்துக்கு பின்னும் பேச்சுவாா்த்தை தொடங்காவிட்டால் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT