தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் ஐந்து வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை தருமபுரத்தில் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று போலியோ சொட்டு மருந்தினை குழந்தைக்கு வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலர் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சி.சுவாமிநாதன், மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் திட்ட இயக்குநர் வி.ராமன், தலைவர் கே.துரை, செயலர் தங்க.துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் துரை.கார்த்திகேயன் மற்றும் கல்லூரி உறுப்பினர் ஆர்.சிவராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.