ஸ்ரீவில்லிபுத்தூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பாக போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் உட்பகுதியில் ஞாயிற்று கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பாக போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் உட்பகுதியில் ஞாயிற்று கிழமை நடைபெற்றது.’
இந்த முகாமிற்கு நகராட்சி ஆணையாளர் மல்லிகா தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சந்திர பிரபா முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் முத்தையா, நகரச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், முன்னாள் கவுன்சிலர் அங்குராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்