பிள்ளைகளுடன் பெற்றோர் நேரத்தை செலவிட வேண்டும்: உயர் நீதிமன்றம்
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
சென்னை: பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செல்லிடப்பேசி விளையாட்டுகளை தடை செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.
மார்ட்டின் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் பேசுவது குறைந்து வருகிறது. எனவே, பெற்றோர்கள் நேரம் செலவிட்டு தங்களது பிள்ளைகளுடன் பேச வேண்டும். பிள்ளைகளுடன் நேரம் செலவிட்டால், செல்லிடப்பேசியில் மூழ்குவது தவிர்க்கப்படும்.
மாணவர்கள், செல்லிடப்பேசியில் மூழ்கிவிடுவதால், மாணவர்களுக்கு அதிக கோபம், தற்கொலை எண்ணம் வருகிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கிவிடாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.