மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 84.45 அடியிலிருந்து 83.29 அடியாக சரிந்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:02 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 84.45 அடியிலிருந்து 83.29 அடியாக சரிந்தது.
வியாழக்கிழமை காலை வினாடிக்கு 4123 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை 1,101 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 45.31டி.எம்.சி ஆக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
Advertisement
ஒஹேனக்கலுக்கு நீர்வரத்து 2,000 கனஅடியாக உள்ளது. மழையளவு 8.60 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.