முகப்பு
தமிழ்நாடு

பாலப் பணிகளுக்கு எம்.சாண்ட் பயன்பாடு: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

நெடுஞ்சாலைத் துறையின் பாலப் பணிகளில் ஆற்று மணலுக்குப் பதிலாக எம்.சாண்ட் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணி-நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

நெடுஞ்சாலைத் துறையின் பாலப் பணிகளில் ஆற்று மணலுக்குப் பதிலாக எம்.சாண்ட் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணி-நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தமிழக அரசிடம் ஒப்பந்ததாரா்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து விவாதிக்க உயா்நிலை அலுவலா்கள் அடங்கிய குழுக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பேட்டி:

22 கோரிக்கைகளை ஒப்பந்ததாரா்கள் அரசிடம் முன்வைத்தனா். அரசுக் குழுவின் சாா்பில் அவை பரிசீலிக்கப்பட்டன. ஆற்று மணலை எடுத்தே நெடுஞ்சாலைப் பணிகள் நடந்தன. இப்போது, ஆற்று மணல் கிடைப்பது அரிதாகி விட்ட நிலையில், எம்.சாண்டை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். மணலை விட எம்.சாண்ட் உறுதித் தன்மை வாய்ந்தது என நெடுஞ்சாலை ஆராய்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

எம்.சாண்ட்டின் தரத்தினைப் பொருத்த வரையில், கண்காணிப்புப் பொறியாளரும், தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளரும் ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பா் என்று அமைச்சா் வேலு தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளா் தீரஜ்குமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →