புதுச்சேரி முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி 
தமிழ்நாடு

புதுச்சேரிக்கு 'மாநில அந்தஸ்து' பெறுவதில் பாஜகவிற்கு அக்கறை இல்லை: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரிக்கு 'மாநில அந்தஸ்து' பெறுவதில் பாஜகவிற்கு அக்கறை இல்லை என்று முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

DIN


புதுச்சேரிக்கு 'மாநில அந்தஸ்து' பெறுவதில் பாஜகவிற்கு அக்கறை இல்லை என்று முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து வே. நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ செய்திக்குறிப்பு: 
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் வளர்ச்சி காண முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அதிகாரிகள் ஆள்வதற்கு இடமளிக்கக் கூடாது.

கடந்த 5 ஆண்டுகளில், துணைநிலை ஆளுநர் மூலம் காங்கிரஸ் கூட்டணி அரசு பட்ட தொல்லைகள் எல்லாம் மக்களுக்குத் தெரியும். மாநில அந்தஸ்துதான் புதுச்சேரி மக்களின் சுதந்திரத்தையும், உரிமையையும் காக்க கூடிய கவசம்.

ஆனால், பிரதமரை சந்தித்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர், பாஜக தலைவர், அமைச்சர்கள், மற்றும் எம்எல்ஏக்கள் மாநில அந்தஸ்து தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.  மாநில அந்தஸ்து பெறுவதில் பாஜகவிற்கு அக்கறை இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாதவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

வெடிகுண்டு கலாச்சாரத்தையும், ரௌடிகள் அட்டகாசத்தையும் தடுக்கவில்லை எனில், புதுச்சேரி மக்களுக்கு நிம்மதி இருக்காது. புதுச்சேரியில் குண்டர்களையும், ரவுடிகளையும் அரசு அடக்க வேண்டும் என்று வே. நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT