சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு 
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை அதிகரிப்பு: சவரன் ரூ.35.880-க்கு விற்பனை

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது சனிக்கிழமையும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து, ரூ.35,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது சனிக்கிழமையும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து, ரூ.35,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296-ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து, கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூ.35.880 ஆகக் குறைந்துள்ளது. 

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 அதிகரித்து, ரூ.35,720-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.5 என சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.35,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.4,485க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, ரூ.74.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,900-க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. ரூ.4,485
1 பவுன் தங்கம்............................... ரூ.35.880
1 கிராம் வெள்ளி............................. ரூ.74.90
1 கிலோ வெள்ளி............................. ரூ.74,900

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,465
1 பவுன் தங்கம்............................... 35,720
1 கிராம் வெள்ளி............................. 73.90
1 கிலோ வெள்ளி............................. 73,900

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT