தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4 முதல் 7)  முதல் புதன்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. 

DIN


தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4 முதல் 7)  முதல் புதன்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  அசாம் மற்றும் மேகாலயாவில் ஒரு சில இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூலை 8 ஆம் தேதி வரை கனமழை முதல் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது.  

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்,  பிகார், அருணாச்சலப் பிரதேசம், கேரளம், மாஹே, மேற்குவங்கம் , சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான், முசாபராபாத், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி, ராஜஸ்தான், கொங்கன் மற்றும் கோவா, கேரளம், மாஹே மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது.

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், கிழக்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம், ஒடிசா, அசாம் மற்றும் மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா, குஜராத் , கடலோர ஆந்திரம், ஏனாம், ராயலசீமா, கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிமை முதல் 7 ஆம் தேதி வரை மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன்

இன்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை வானிலை மையம்

SCROLL FOR NEXT