முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் குறைந்துவரும் கரோனா பாதிப்பு: மண்டலவாரியாக நிலவரம்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,446 ஆக குறைந்துள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,446 ஆக குறைந்துள்ளது.  

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையிலும் பாதிப்பு படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் 2,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 5,33,224 ஆக உள்ளது. இதுவரை கரோனாவுக்கு 8,217 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,22,561 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் நேற்று மட்டும் 27,349 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.