துரைமுருகன் 
தமிழ்நாடு

மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்காது: துரைமுருகன்

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசுக்கு அனுமதி தராது என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

DIN


மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசுக்கு அனுமதி தராது என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

தில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை மாநில நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை 6) சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, மேக்கேதாட்டு அணை கட்ட தமிழகத்தின் கருத்தை கேட்காமல் மத்திய அரசு அனுமதி வழங்காது என்று ஷெகாவத் கூறினார். 

கர்நாடக அரசு ஒப்புதல் வாங்கிவிட்டதால் மட்டும் மற்ற மாநிலத்தின் நலனுக்கு எதிராக  அணை கட்டி விட முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனியாக ஒரு நிரந்தர தலைவரை நியமிக்க கோரிக்கை வைத்துள்ளோம்.

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு தன்னிச்சையாக அணை கட்டியது குறித்தும் புகார் தெரிவித்துள்ளோம்.

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தமிழகத்திற்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்தினோம். 

தமிழகத்திற்கு மாதா மாதம்  கர்காடக அரசு தர வேண்டிய காவிரி நீரை திறந்துவிட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்று  துரைமுருகன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

சாலைகளில் யானைகள் நடமாடுவதை தற்படம் எடுக்கக்கூடாது- வனத் துறை எச்சரிக்கை

ஆகஸ்ட் 15-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

கோவை விமான நிலையத்தில் ரூ. 7 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

தேவா்சோலை பகுதியில் புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு

SCROLL FOR NEXT