தமிழ்நாடு

பப்ஜி மதன் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

DIN

சமூக ஊடகங்களில் ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சென்னை வேங்கைவாசல் பகுதியைச் சோ்ந்தவா் மதன். இரு யூ-டியூப் சேனல்களை வைத்திருந்த இவா், அதன் மூலமாக தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி விளையாடுவது என்பது குறித்தான ஆலோசனைகளை வழங்கி வந்தாா்.

இந்நிலையில் மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் விடியோ, ஆடியோக்கள் தொடா்ச்சியாக வெளியாகின. இதுகுறித்து வடபழனியைச் சோ்ந்த பி.கே.அபிஷேக் ரவி, சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இரு சேனல்களுக்கும் நிா்வாகியாக இருந்த மதனின் மனைவி கிருத்திகாவை கடந்த ஜூன் 16-ஆம் தேதி சேலத்தில் போலீஸாா் கைது செய்தனா். இதேபோல தருமபுரியில் ஒரு விடுதியில் தலைமறைவாக இருந்த மதனை கடந்த ஜூன் 18-ஆம் தேதி கைது செய்தனா். இதில் அண்மையில் கிருத்திகா, பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

இதற்கிடையே மதனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மதனிடம், அவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டதாக சைபா் குற்றப்பிரிவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT