சென்னையில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம்!
சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,776 ஆகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி தற்போது 1,776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 5,33,849 ஆக உள்ளது. இதுவரை கரோனாவுக்கு 8,232 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,23,841 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் நேற்று மட்டும் 26,924 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.