திருவெண்காடு சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் இல்லத்திற்குச் சென்றார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் இல்லத்திற்குச் சென்றார்.
நேற்று திருவாரூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை காட்டூரில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த அவர், மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கான தனிக் கட்டடத்தை திறந்து வைத்தார். இதையடுத்து, கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளைக்குச் சென்றார்.
அங்கு இருந்த அஞ்சுகம் அம்மையார், முத்துவேலர், முரசொலிமாறன், கருணாநிதி ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கருணாநிதியின் பழமையான புகைப்படத் தொகுப்புகளை பார்வையிட்டார். பின்னர் தனியார் திருமண அரங்கில் பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட முதல்வர், திருக்குவளையில் இருந்து புறப்பட்டு திருவெண்காடு சென்றார்.
திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு முதல்வர் வருவதையறிந்த அங்குள்ள பொதுமக்கள் அவரைக் காண வரிசையில் நின்றனர்.
பின்னர் திருவெண்காடு வந்த முதல்வர் அங்கிருந்த மக்களிடம்பொறுமையாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.
முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன், பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் உடனிருந்தனர்.