முகப்பு
தமிழ்நாடு

தேர்தலுக்கு முன் மகேந்திரன் இணைந்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும்: மு.க.ஸ்டாலின்

தேர்தலுக்கு முன் மகேந்திரன் இணைந்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கொங்கு மண்டலத்தில் கிடைத்திருக்கும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

தேர்தலுக்கு முன் மகேந்திரன் இணைந்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கொங்கு மண்டலத்தில் கிடைத்திருக்கும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
மாற்று கட்சியினர் திமுகவில் இணையு நிக்ழச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அப்போது முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய மகேந்திரன், பத்மபிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்துள்ளனர். மேலும், திமுகவில் இணையவுள்ள 11,000 பேரின் பெயர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளார். 
நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் திமுக எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததை நினைத்து வருத்தப்படுகிறேன். லேட் ஆனாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். தேர்தலுக்கு முன் மகேந்திரன் போன்றோர் இணைந்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும் என்றார். இந்த நிகழ்வில், அமைச்சர் துரைமுருகன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.  
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி  மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.  நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் கோவை பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் அதிகளவிலான வாக்குகளை பெற முக்கிய காரணமாக இருந்தவர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.