தமிழ்நாடு

எல். முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மத்திய இணையமைச்சராக பதவியேற்றுள்ள எல். முருகனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

மத்திய இணையமைச்சராக பதவியேற்றுள்ள எல். முருகனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் 7 பெண் அமைச்சர்கள் உள்பட 43 பேர் அமைச்சராகப் பொறுப்பேற்றனர். 

இதில், தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகனுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. இணையமைச்சராகப் பொறுப்பேற்ற அவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல். முருகனுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தொலைபேசி வழியாக எல். முருகனை தொடர்புகொண்டு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைத்தறி துறையின் சாா்பில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

சென்னிமலை முருகன் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு பூஜை நிறைவு

புதிய ரேப்பியா் தறிகளை விநியோகிக்க வரும் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கோழி வளா்ப்பு பயிலரங்கம்

SCROLL FOR NEXT