முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரி காமராஜர் மணி மண்டபம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் ரங்கசாமி 

புதுச்சேரி காமராஜர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
காமராஜர் மணிமண்டப கட்டுமானப் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் என். ரங்கசாமி
பகிர்:

புதுச்சேரி காமராஜர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காமராஜர் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல்வராக என்.ரங்கசாமி இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டு காமராஜர் மணி மண்டபம் கட்டும் பணிகள் தொடங்கியது. எனினும் நிதி பற்றாக்குறையால் திட்டப் பணிகள் தாமதமாகி வந்தது. 50 சதவீத பணிகள் முடிந்த நிலையில், இதனையடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சியில் மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

புதுச்சேரியில் 3.75 ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்த மணிமண்டபத்தில், அருங்காட்சியகம், ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ. 30 கோடி மதிப்பில் மணி மண்டபம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், மணிமண்டபம் திறக்கப்படாமல் உள்ளது.

இதனை அடுத்து, மீண்டும் முதல்வராக வந்துள்ள என். ரங்கசாமி, வியாழக்கிழமை காமராஜர் மணிமண்டப கட்டுமான பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தவர், விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, வரும் காமராஜர் பிறந்த நாளில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.