திரைப்படங்களுக்கு வரி விலக்களிக்கும் குழு நியமனம்: உயர்நீதிமன்றம் உத்தரவு 
தமிழ்நாடு

திரைப்படங்களுக்கு வரி விலக்களிக்கும் குழு நியமனம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

திரைபடங்களுக்கு வரி விலக்களிக்கும் குழு அமைப்பதில் ஒரு தலைபட்சமாக செயல்படுவதோ, ஊழலுக்கு வழி வகுக்கவோ

DIN

சென்னை: திரைபடங்களுக்கு வரி விலக்களிக்கும் குழு அமைப்பதில் ஒரு தலைபட்சமாக செயல்படுவதோ, ஊழலுக்கு வழி வகுக்கவோ இடம் தராத வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு  கொள்கை முடிவெடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவில்,  தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்களிப்பது குறித்து ஆய்வு செய்ய கடந்த ஜனவரி 2012 -ஆம் ஆண்டு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. தங்கள் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கு விலக்களிப்பதில் அரசு  பாகுபாடு காட்டுவதாக கோரி கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தங்களது நிறுவனம் தயாரித்த படங்களுக்கு வரி விலக்கு கோரி ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் உள்ளது.  மனுதாரரின் நிறுவனம்  உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமானது என்பதால் மட்டுமே வரி விலக்களிப்பதில்  பாகுபாடு காட்டபட்டுவதாக  தெரிவித்தார்.

அப்போது வணிக வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மனுதாரர் எந்தவொரு குற்றச்சாட்டையும் குறிப்பிட்டுக் கூறாமல், நிபுணர் குழுவின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தக் குழுவில் பெரும்பாலும் ஆளுங்கட்சிகளுக்கு வேண்டியவர்கள் மட்டுமே  இடம் பெற்றுள்ளனர். மேலும், இது போல பாகுபாடு காட்டி, ஒரு சார்பு நிலையெடுப்பது நாட்டின் வளர்ச்சிக்கே பெரும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே இது போன்ற குழுக்களை அமைக்கும் போது, அரசியலமைப்புக்கு எதிரான நடைமுறைகள் இருந்தால் அதனை  இரும்பு கரம் கொண்டு  அரசு ஒடுக்க வேண்டும் என  அறிவுறுத்தினார். 

மேலும், இந்த வழக்கில் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு எதிராக அதிகாரிகள் பாகுபாடு காட்டியது உறுதியாகியுள்ளது. இதுபோன்ற நிபுணர் குழுவை நியமிக்கும் போது உரிய தகுதியின் அடிப்படையில் ஆட்களைத் தேர்வு செய்ய வேண்டும்.  பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுத்து,  வெளிப்படத் தன்மையுடன் இருக்க வேண்டும். திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்காக அமைக்கப்படும் குழு பாரபட்சம் இல்லாத, ஊழலற்ற குழுவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த  குழுவின் அனைத்து நடவடிக்கைகளையும் மாற்றி அமைக்கும் வகையில் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT