முகப்பு
முதல்வா் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு

மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 

தமிழ்நாடு

மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
முதல்வா் மு.க.ஸ்டாலின்
பகிர்:

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும் மேக்கேதாட்டு பகுதியில் கட்டாயம் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறி வருகிறார். 

இதுதொடர்பாக  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தில்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, 'மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது' என்று வலியுறுத்தினார். 

அணையை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எதிர்க்கும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார். 

இந்நிலையில் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 

அதன்படி வருகிற 12  ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதல்வரும், பிரதமரை நேரில் சந்தித்து மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்துத் தமிழகத்தின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

மேக்கேதாட்டு அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது எனக் கோரி கர்நாடக முதல்வர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியபோது, இந்த அணை கட்டுவதால், தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபடத் தெரிவித்து  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழகத்திலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள அனைத்து சட்டப்பேரவை கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில், வருகிற 12-7-2021 (திங்கட்கிழமை) அன்று காலை 10-30 மணியளவில், தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகத்திலுள்ள அனைத்துச் சட்டப்பேரவைக் கட்சிகளுக்கும் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →