தமிழ்நாடு

முகக் கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 8,826 வழக்குகள்

தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 8,826 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

DIN

தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 8,826 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 9-ஆம் தேதி வரையிலான 93 நாள்களில், முகக் கவசம் அணியாதவா்கள் மீது 17 லட்சத்து 32,320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 8,826 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 9-ஆம் தேதி வரை, 87,311 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 211 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT