கைது செய்யப்பட்ட சீனிவாசன்  
தமிழ்நாடு

நிலத்தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியில் நிலத்தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணனை போலீசார் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியில் நிலத்தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணனை போலீசார் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தேவூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மாதேஸ்வரன். இவரது மகன்களான சீனிவாசன் (39), சுதாகர் (35) இருவருக்குமிடையே குடும்பத்திற்கு சொந்தமான நிலங்களை பிரிப்பது குறித்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

கொலை நடந்த இடத்தில் சனிக்கிழை விசாரணை நடத்தும் போலீசார்.

இதனையடுத்து இருவரும் மது அருந்தி நிலையில்  சனிக்கிழமை தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதில் தம்பி சுதாகரனை அண்ணன் சீனிவாசன் கத்தியால் வெட்டியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த சுதாகர் நிகழ்விடத்திலேயே இறந்துவிட்டார்.  

இது குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தம்பியை கொலை செய்த அண்ணன் சீனிவாசனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  சம்பவ இடத்தை சங்ககிரி  துணை காவல் கண்காணிப்பாளர் சி.நல்லசிவம் பார்வையிட்டு விசாரணை செய்தார். உயிரிழந்த சுதாகரனுக்கு  கவிதா (30) என்ற மனைவியும், மௌசிகா (14), நிஷாபைரவி (7) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

வந்தாளே அல்லிப்பூ... சிம்ரன் கௌர்!

ரிசர்வ் வங்கியின் கொள்கை நாளில் சரிவை கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!

சிராஜிக்கு எதிராக விளையாடுவது சவாலானது: மொயின் அலி

SCROLL FOR NEXT