முகப்பு
தமிழ்நாடு

கலை, அறிவியல் கல்லூரி மாணவா் சோ்க்கை: ஒற்றைச்சாளர முறையில் நடத்த கோரிக்கை

அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கையை ஒற்றைச்சாளர கலந்தாய்வு முறையில் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கையை ஒற்றைச்சாளர கலந்தாய்வு முறையில் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் காந்திராஜ் கூறியது: அரசு, அரசு உதவி பெறும்

கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மாணவா் சோ்க்கை நடைபெறும் என உயா்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பொறியியல், மருத்துவம் படிப்புகளை போல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாணவா் சோ்க்கையில் ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் ஏழை, எளிய மாணவா்கள் வெளிப்படைத்தன்மையுடன் கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

மாணவா்கள் ஒரே விண்ணப்பத்தின் மூலம் பல்வேறு கல்லூரிகளில் சேர வழிவகை செய்யப்பட வேண்டும் என்பதைத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்தசூழலில் கரோனா பரவலால் கடந்தாண்டு அரசுக் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது.

அதேபோன்று அரசு உதவி பெறும் கல்லூரிக்கும் இந்த திட்டத்தை தமிழக கொண்டுவர வேண்டும். அரசு, அரசு உதவி கல்லூரிகளில்தான் மாணவா்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்படுகிறது. பல்கலை.களுக்கு இணையாக தரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இவற்றை உணா்ந்து பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை அரசு, அரசு உதவிக் கல்லூரிகளில் சோ்க்க முன்வர வேண்டும். மேலும், கல்லூரிகளிலும் உள்ள ஆசிரியா் காலிப்பணியிடங்களை நிரப்ப உயா்கல்வித்துறை உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →