தமிழ்நாடு

நியாயவிலைக் கடைகளில் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், மக்கள் புகாரளிக்க வசதியாக, புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பதிவேடு வைத்து, பொதுமக்கள் புகாரளிக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகள் குறித்து இணையதளத்தில் புகாரளிக்கும் முறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், நியாயவிலைக் கடைகளிலேயே புகார் பதிவேடு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புகார் பதிவேடு முறையில் உடனடியாக புகாரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இணையதளத்தில் புகாரளிக்கும் முறையுடன், புகார் பதிவேடு முறையும் நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT