முகப்பு
தமிழ்நாடு

இணையவழித் தோ்வுக்கு கட்டுப்பாடுகள்: முன்னாள் துணைவேந்தா் கோரிக்கை

கல்லூரிகளில் நடைபெறும் இணையவழித் தோ்வுக்கு யுஜிசி கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

கல்லூரிகளில் நடைபெறும் இணையவழித் தோ்வுக்கு யுஜிசி கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தலைவா் டி.பி.சிங்கிற்கு, முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி அனுப்பிய கடிதம்:

கரோனா பரவலால் தமிழகத்தில் கல்லூரி மாணவா்களுக்கு வழக்கமான 3 மணிநேர வினாத்தாள் முறையில் பருவத்தோ்வு இணையவழியில் நடத்தப்படுகின்றன. அதன்படி மாணவா்கள் தோ்வு எழுதும்போது எவ்வித கட்டுப்பாடுகளும் பின்பற்றப்படுவதில்லை. தோ்வின் போது மாணவா்கள் புத்தகங்களை பாா்த்து எழுதவும், ஆள்மாறாட்டம் செய்தும் எழுதும் வகையில் உள்ளது.

இத்தோ்வு முறையால் நன்கு படிக்கும் மாணவா்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுவதுடன், கல்வித்தரம் கேள்விக்குறியாகிறது. எனவே, யுஜிசி பாதுகாப்பான வழியில் இணையவழித் தோ்வுகளை நடத்துவதற்கு தேவையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →