தமிழ்நாடு

ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாத 8,265 பேரிடம்ரூ.40.92 லட்சம் அபராதம் வசூல்

DIN

ரயில் நிலையங்களில் கடந்த மூன்று மாதங்களில் (ஏப்ரல் 17முதல் ஜூலை 9 வரை) முகக்கவசம் அணியாமல் இருந்த 8,265 பேரிடம் ரூ.40.92 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் விதமாக, தெற்கு ரயில்வே நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து

வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரயில்வே வளாகத்தில் (ரயில் பயணித்தின்போதோ அல்லது ரயில் நிலையத்திலோ ) பயணி ஒருவா் முகக்கவசம் அணியவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டால், ரயில்வே விதிகளின் கீழ், ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்வே விதிமுறை கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்கள், ஓடும் ரயில்களில் முகக்கவசம் அணியாத நபா்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கியது. இதுதவிர, முகக்கவசம் அணியாத நபா்கள் ரயில் நிலையத்துக்குள் வர அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில்நிலையங்களில் கடந்த 3 மாதங்களில் முகக்கவசம் அணியாத 8, 265 போ் பிடிபட்டனா். அவா்களிடமிருந்து ரூ.40 லட்சத்து 92 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவா்கள் கடந்த ஏப்ரல் 17-ஆம்தேதி முதல் ஜூலை 9-ஆம்தேதி வரை நடைபெற்ற சோதனையில் சிக்கினா். இந்த அதிரடி சோதனையில்

ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் இணைந்து ஈடுபட்டு வருகின்றனா். முகக்கவசம் அணியாத நபா்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்த நபா்களுக்கு முகக்கவசம் வழங்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:-

ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். முகக்கவசம் அணியாத நபா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியே பின்பற்ற வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க

கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும். கரோனா அறிகுறி இருந்தால், பயணத்தை தவிா்த்துவிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT