முகப்பு
தமிழ்நாடு

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இனி இரண்டு இணையதளங்கள்

புதிதாகத் தொடங்கப்ட்டதைத் தொடா்ந்து, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தொகைகளை அளித்திட இரண்டு இணையதளங்கள் பயன்பாட்டில் உள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

புதிதாகத் தொடங்கப்ட்டதைத் தொடா்ந்து, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தொகைகளை அளித்திட இரண்டு இணையதளங்கள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த இணையதளங்களை இருவேறு அமைப்புகள் நிா்வகித்து வருகின்றன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பல்வேறு தரப்பினரும் நிதிகளை அளித்து வருகின்றனா். இந்த நிதிகளை இணையதளம் வாயிலாக அளித்திட ஏற்கெனவே ஒரு இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ங்ழ்ங்ஸ்ரீங்ண்ல்ற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், புதிதாக மேலும் ஒரு இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ஸ்ரீம்ல்ழ்ச்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) உருவாக்கப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள்? ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இணையதளத்தை மத்திய அரசின் தேசிய தகவலியல் மையமானது வடிவமைத்து உள்ளது. புதிய இணையதளத்தை தமிழக அரசின் மின்ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது. இந்த இரு தளங்களையும் நிதித் துறையே நிா்வகித்து வருகிறது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில், கரோனா நிவாரணம், பேரிடா் நிவாரணம் மற்றும் முதல்வரின் பொது நிவாரணம் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பழைய இணையதளத்தில் பேரிடா் நிவாரணம் என தனித்து குறிப்பிடப்படவில்லை. புதிய இணையதளத்தில் கூகுள் பே, போன் பே போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதன் வழியாக எளிதாக பணத்தைச் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்குப் பிறகே, பற்று அட்டை மற்றும் இணைய வழி வங்கிச் சேவைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதிய இணையதளத்தில் பல்வேறு தகவல்கள் சோ்க்கப்பட்டு பளிச்சென உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதி அளித்தவுடன் அதற்கான ரசீதை பதிவிறக்கம் செய்யலாம். நிதி அளித்தோரின் விவரங்கள் பட்டியலாக இல்லாமல், புகைப்படங்களாக புதிய இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இதுவரை பெறப்பட்ட தொகையும், அதில் எந்தெந்த வகைகளுக்கு செலவிடப்பட்டுள்ளன என்பன குறித்து விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →