தமிழ்நாடு

தமிழகத்தில் ஜிகா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தில் ஜிகா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை கோட்டூர்புரத்தில் தடுப்பூசி முகாம் ஒன்றை தொடக்கிவைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 

கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் சென்று ஆய்வு செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை. 

கேரளத்திலிருந்து பேருந்து, ரயில் மூலமாக தமிழகம் வரும் மக்களை பரிசோதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது, கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்றார். 

பின்னர் கருப்புப் பூஞ்சை குறித்து பேசிய அவர், தமிழகத்தில் 7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் 3,929 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். கருப்பு பூஞ்சை நோய்க்காக தமிழகம் முழுவதும் 7,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT