தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: நேற்றைவிட 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு
தமிழகத்தில் நேற்றைவிட 12 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்றைவிட 12 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் இன்று 2,405 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 12 மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
| மாவட்டம் | நேற்று | இன்று |
| அரியலூர் | 28 | 30 |
| திண்டுக்கல் | 18 | 23 |
| கள்ளக்குறிச்சி | 65 | 72 |
| கரூர் | 16 | 21 |
| மதுரை | 31 | 34 |
| நாமக்கல் | 66 | 74 |
| பெரம்பலூர் | 13 | 24 |
| புதுக்கோட்டை | 31 | 37 |
| ராமநாதபுரம் | 11 | 15 |
| திருவாரூர் | 27 | 29 |
| வேலூர் | 39 | 41 |
தமிழகத்தில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், சில மாவட்டங்களில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இன்று 3,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மருத்துவமனையில் 29,950 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.