முகப்பு
தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் தொழிற்சங்கப்பேரவை தொடக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை தொழிற்சங்கப்பேரவை – “நம்மவர் தொழிற்சங்கப்பேரவை” துவக்க விழா, சென்னையில் இன்று நடைபெற்றது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
பகிர்:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்கப்பேரவை – “நம்மவர் தொழிற்சங்கப்பேரவை” துவக்க விழா, நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் காமராஜரின் 119வது பிறந்த நாள் விழா இன்று (15.07.2021) சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு தலைமை தொழிற்சங்க பேரவையின் பெயரை அறிவித்து, நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
பின், தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்க பேரவையின் கொடியை ஏற்றினார். அத்துடன் காமராஜரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு 119 நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகினார்.
இவ்விழாவில் “நம்மவர் தொழிற்சங்கப்பேரவை” தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, பொதுச் செயலாளர்கள் A.G. மௌரியா, R. தங்கவேலு, அரசியல் ஆலோசகர்கள் V. பொன்ராஜ், பழ. கருப்பைய்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். முடிவாக, தலைவர் கமல் ஹாசன் பேருரையாற்றினார். அப்போது பேசுகையில், தமிழ்நாடு வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர் லாங் லிவ் தமிழ்நாடு எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.