முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 2,312 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,312பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
தமிழ்நாட்டில் புதிதாக 2,312 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,312பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,31,118ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 252 பேருக்கும், ,சேலத்தில் 168 பேருக்கும், தஞ்சாவூரில் 158 பேருக்கும், ஈரோட்டில் 152 பேருக்கும், சென்னை 144 பேருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 46 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 33,652ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 2,986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,48,778 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.